கடவத்தையில் 27 மில்லியன் ரூபா பணம் திருட்டு – ஒருவர் கைது

0
123

கடவத்தையில் உள்ள துணிக்கடை ஒன்றில் பெட்டகத்தை உடைத்து 27 மில்லியன் ரூபா பணத்தை திருடிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ம் திகதி இரவு கடையின் பெட்டகத்தை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையின் நிதி முகாமையாளர் கடவத்தை பொலிஸில் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளார்.

கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து திருடப்பட்ட 27,219,380 ரூபாயும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரில் இயந்திரத்தின் உதவியுடன் பெட்டகத்தை உடைத்து பணத்தை திருடியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இரவில் தப்பிச் செல்லும் நோக்கில் திருடப்பட்ட பணத்தை வேறு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு தண்ணீர் தாங்கியில் மறைத்திருந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here