கண்டி – கலகெதர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கண்டி – கலகெதர – மடவல பகுதியில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் அதனை அண்மித்துள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.