கனடாவில் பனிப்புயல் காரணமாக முழுமையாக உறைந்துபோன நகரம்!

0
66

கனடாவில் பனிப்புயல் காரணமாக நகரமொன்று முழுமையாக உறைந்து போயுள்ளது. நயகராவின் சிறிய நகரமொன்று முற்று முழுதாக உறைந்து போயுள்ளது.

பனிப்புயல் காரணமாக இந்த நகரை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளின் கூரைகள், வாகனங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனிப்படர்ந்துள்ளது.

Fort Erie நகரின் கிறிஸ்டல் பீச் பகுதி இவ்வாறு பனிப்புயலினால் உறைந்து போயுள்ளது. இவ்வாறான மோசமான காலநிலையை அண்மைய காலங்களில் தாங்கள் எதிர்நோக்கியது கிடையாது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மின்சார வசதியின்றி பல நாட்கள் அவதியுற நேரிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here