கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட வைத்தியர்

0
16

கனடாவிற்கு பணிக்கு அனுப்புவதாக சுமார் ஏழு கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஆனந்த அபேரத்னவிற்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே மறுத்துள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த அறிக்கைக்கு அமைய பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரான வைத்தியர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் பிணை வழங்குமாறு கோரிய போது, ​​மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் அனைத்தும் செலுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார்.

சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விசாரணைப் பிரிவிற்கு வழங்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அதற்கமைய, சந்தேகநபரான வைத்தியரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஜால பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீஆனி மனம்பேரி என்ற சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here