காதலனை தாக்கிய காதலி கைது!

0
19

டிக்டாக் செயலி ஊடாக சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களாகி பின்னர் காதலர்களாகிய பின்னர் காதலனை தாக்கிய காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த காதலனை காதலியிடம் தங்க மோதிரத்தை வாங்கி சென்றுள்ளார். அதை மீண்டும் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த காதலி, இன்னும் சிலருடன் இணைந்து காதலனை தாக்கி, மோதிரத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பில் காதலி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெலிகட பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவர்களில் காதலியின் நெருங்கிய நண்பி, அந்த நண்பியின் காதலனும் அடங்குவர்.

 காதலன் மீது சந்தேக நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர், அவரிடமிருந்து 3000 ரூபாய் பணம், 150,000 ரூபாய் பெறுமதியான அப்பில் வகை தொலைபேசி, தலைக்கவசம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன், மோட்டார் சைக்கிளுக்கு 14,000 ரூபாய்க்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here