காதலனை மகிழ்விக்க வீட்டுக்குள் கஞ்சா செடியை காதல் அடையாளமாக வளர்த்த காதலி!

0
16

காதலனை மகிழ்விப்பதற்காக வீட்டின் சமையலறையில் கஞ்சா செடி வளர்த்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். காதலுக்கு அடையாளமாக ரோஜா செடி வளர்ப்போர் மத்தியில் கஞ்சா செடி வளர்த்து சிக்கியுள்ளது இந்த ஜோடி.கொச்சியில் உள்ள ஆக்ஸொனியா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக போலீசார் சோதனை நடத்தினர்.

தலையில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மென்பொறியாளர் ஆலன் (26) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ஒரு அறையில் இருந்து வந்த அவரது காதலி அபர்ணா என்பவர் வீட்டின் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்ப்பதை ஒப்புக் கொண்டார்.

சமையலறையில் ஒரு பகுதியில் சிறிய தொட்டியில் 4 மாதங்களாக வளர்க்கப்பட்ட ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட கஞ்சா செடி யை பார்த்த போலீசார் மென்பொறியாளர் ஆலனையும், அவரது காதலி அபர்னாவையும் (24) பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இணையத்தில் கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்று தேடி பார்த்து கஞ்சா விதையை ஆன் லைனில் வாங்கி பயிர்செய்து கஞ்சா செடியை வளர்த்ததாகவும், அந்த செடிக்கு காற்று சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக குட்டியாக ஒரு மின் விசிறியை மெல்லிய ஸ்பீடில் 24 மணி நேரமும் சுற்ற விட்ட அபர்ணா, சூரிய ஒளிக்கு பதிலாக மிதமான வெப்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்.இ.டி விளக்கு ஒன்றையும் அந்த செடிக்கு மேல் தொங்க விட்டது தெரியவந்தது.

காதலனை மகிழ்விக்கும் வகையில் காதலுக்கு அடையாளமாக அந்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக அவருடன் தங்கி இருந்த காதலி அபர்ணா தெரிவித்தார்.

காதலுக்காக எதை எதையோ கொட்டிக் கொடுத்த ஜோடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடிவளர்த்த கேடி ஜோடியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறித்த குடியிருப்பில் வசித்து வந்த பத்தனம்திட்டாவை சேர்ந்த அமல் என்ற இளைஞனை சாட்சியாக பொலிசார் அழைத்து சென்றனர். அவரை சோதனையிட்டதில், ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞசாவை மீட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here