காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! – உ.பியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்!

0
11

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இரு பெண்கள் போலி ஆவணங்கள் மூலம் 12 கோடி ரூபா பண மோசடி செய்த நிலையில் கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாவாந்துறைக்கு கொரும்பில் இருந்து இரகசிய புலனாய்வுப் பிரிவு பொலிசாரே நேற்றைய தினம் இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். இதன்போது 30 மற்றும் 34 வயதுப் பெண்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகுதி நகை மற்றும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உத்தர பிரதேசத்தில் தன்னை விட்டு வேறு ஒருவரை மணந்த காதலியை காதலனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் காதலன் ஒருவர் தனது காதலியை கொன்று பல்வேறு துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதுபோன்ற சம்பவம் உத்தர பிரதேசத்திலும் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் அஹ்ராலா மாவட்டத்தில் உள்ள கவுரி கா புரா என்ற கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் துர்நாற்றம் வீசியதாம் அம்மக்கள் அங்கே சென்று பார்த்துள்ளனர். கிணற்றிற்குள் தலை இல்லாமல் சிதிலமடைந்த நிலையில் பிணம் ஒன்று கிடக்கவே உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் நவம்பர் 15ல் நடந்த நிலையில் தலையில்லா பிணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அது ஆராதனா என்ற இளம்பெண்ணின் உடல் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆராதனாவின் முன்னாள் காதலன் ப்ரின்ஸ் யாதவ்வை பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய உண்மை தெரிய வந்துள்ளது.ஆராதனாவும், ப்ரின்ஸ் யாதவ்வும் முன்னர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் சில மாதங்கள் முன்னதாக ப்ரின்ஸ் யாதவ் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதற்கிடையே ஆராதனாவுக்கு அவரது வீட்டில் வேறு பையனை மணம் முடித்துள்ளனர்.

ALSO READ: திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி; அப்பளமாக நொறுங்கிய 48 வாகனங்கள்!

இதனால் ஆத்திரமடைந்த ப்ரின்ஸ் யாதவ் ஆராதனாவை பேச வேண்டுமென கோவிலுக்கு வருமாறு சொல்லி, அங்கிருந்து அவரை அருகே இருந்த கரும்பு வயலுக்கு கொண்டு சென்று கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் அவரும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து ஆராதனாவின் தலையை தனியாக எடுத்ததுடன் உடலையும் சிதைத்து கிணற்றில் வீசியுள்ளனர்.

இதுதொடர்பாக ப்ரின்ஸ் யாதவ் மற்றும் அவனது கூட்டாளிகளை விசாரிக்க சம்பவ இடம் அழைத்து சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு அவர்கள் ஓடியதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ப்ரின்ஸ் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் பெண்ணின் தலை மற்றும் கொல்ல பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here