குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்!

0
43

நேற்று (17) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (17) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.யட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இரவு 11.00 மணிக்கும், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயாரே சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here