கொட்டகலை ஜெராஜன் மாவத்தை பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்!

0
122

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொட்டகலை ஜெயராஜன் மாவத்தை உள்ளக பாதையொன்றைச் செப்பனிடுவதற்கு 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்ளக பாதையைச் செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளரும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான அ.ராஜமாணிக்கம் , கொட்டகலை அமைப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவானந்தன் , நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விஜயவீரன் உட்பட கிராம மக்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here