75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
எதிர்வரும் 04ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப் பாதைகள் தொடர்பிலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெளிவுபடுத்தினார்.