கொழும்பில் ஒரே நேரத்தில் நால்வருக்கு மரண தண்டனை

0
70

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொட்டாஞ்சேனையை சேர்ந்த நால்வருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் மரண தண்டனை விதித்துள்ளார்.இந்த கொலை வழக்கின் தீர்ப்பை பிரகடனப்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவர் நீதிமன்றத்தை தவிர்த்து வருவதாகவும், அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here