இந்த காதலர் தினத்தன்று தாய்லாந்தில் அதிகளவான அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் நிலையில், உடலுறவின் போது முகக்கவசம் அணிவது உட்பட பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, அந்நாட்டு தாய் மொழியில் ‘காதல் மாவட்டம்’ என அழைக்கப்படும் பேங் ராக்கின் பாங்கொக் மாவட்டத்தில், திருமணப் பதிவு அலுவலகங்களில் பெரும்பாலும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.
கொவிட் என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல, ஆனால் நெருங்கிய தொடர்பு சுவாசம் மற்றும் உமிழ்நீரை பரிமாறிக்கொள்வதன் மூலம் கொவிட் தொற்றுவது சாத்தியமாகும், என்று இனப்பெருக்க சுகாதார பணியக இயக்குனர் புன்யாரிட் சுக்ரத் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.
தம்பதிகள் தங்கள் துணைக்கு கொவிட் வைரஸ் பரவுவதைத் தடுக்க, இரவு நேரத்துக்கு முன் அன்டிஜன் சோதனைகளைச் செய்ய அவர் பரிந்துரைத்துள்ளார்.
காதலர்கள் ஆழமாக முத்தமிடுவதைத் தவிர்க்கவும், மற்றும் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க கருத்தடைகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
முடிந்தால், உடலுறவு கொள்ளும்போது முகக்கவசங்களை அணிவது கொவிட் அபாயங்களைக் குறைக்க உதவும், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.