கொவிட் தடுப்பூசியால் 11,000 பேர் பலி

0
104

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, வார இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு தேசிய செய்தித்தாள் இதைத் தெரிவித்துள்ளது.

ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

Oxford-AstraZeneca கொவிட் தடுப்பூசி சமீபத்தில் அதே நிறுவனத்தால் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. மூன்று பில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்ட பிறகு தான் இது மீளப்பெறப்பட்டது.

இந்த முடிவால் உலகம் முழுவதும் இது தொடர்பான விவாதம் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், மற்ற கொவிட் தடுப்பூசிகளுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா அதன் தடுப்பூசியைப் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுவதாகக் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வணிக ரீதியான முடிவின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், சில நிபுணர்கள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை உட்கொண்டதன் பின்னர் உடலில் இரத்தம் உறைந்து இறந்ததாக 81 குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு ஆதரவான அறிஞர்கள் இந்த தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏனைய தடுப்பூசிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here