கோட்டாகோகமவில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்கும் எந்த நோக்கமும் இராணுவத்துக்கு இல்லை என இராணுவத் தளபதி ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் பொது இடங்களில் ஒன்று கூடுவது குற்றமாகும் என கோட்டா கோ கமவுக்கு பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக அறிவித்துள்ள நிலையிலேயே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.