கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை!

0
125

பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அல்லது கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி ஆஜராகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

1251 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை கண்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here