கல்வி பொது தராதர உயர் தர தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக புலமைப்பரிசிலுக்கு தகுதியுடைய மாணவர்கள், தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன், வகுப்பாசிரியர், பாடசாலை அதிபர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டடம், D.R.விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் பெயர் மற்றும் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ள கல்வி வலயத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி கடந்த 22 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது