நூற்றாண்டு காலமாக தமது சந்தா மூலம் மலையக அரசியலை முன்னகர்த்திச் சென்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து இனி மேலாவது அவர்களிடம் சந்தா வாங்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். மலையக அரசியல் அரங்கம் தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா பெறாத தொழிற்சங்க கட்டமைப்பை அறிமுகம் செய்வதோடு ஏனைய தொழிற்சங்க அமைப்புகளையும் இந்தகலாசாரத்தினைத் தொடருமாறு வேண்டுகோள் விடுக்கிறது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் கேட்டுக்கொண்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடங்கப்பட்ட மலையக அரசியல் அரங்கத்தின் தொழிற்சங்க பிரிவாக இயங்கும் வகையில் 2023 பெப்ரவரி 4 ஆம் திகதி வட்டகொடஇ மடகொம்பர சி. வி . வேலுப்பிள்ளை நினைவிடத்தில் மலையக பாட்டாளிகள் அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மலையகப் பாட்டாளிகள் அரங்கம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகர் தெரிவித்ததாவதுஇ
மலையகத்தின் 200 வயது இன்று பரவலாக பல்வேறு தலைப்புகளில் நினைவுகூரப்படுகிறது. அதில் அரசியல் தொழிற்சங்கம் ஆகிய துறைகளில் மலையகம் பயணித்த பாதையை மீட்டிப் பார்க்கும் அதேநேரம் அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் தொழிற்சங்க செல்நெறியைத் தீர்மானிக்கும் எண்ணக்கருவை மலையக அரசியல் அரங்கம் முன்வைக்கிறது.
200 வருடங்களில் முதல் 100 வருடங்களும் அடிமை நிலையில் வைக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகம் அடுத்த நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் பெறுவதற்கு தொழிற்சங்கம் எனும் கட்டமைப்பே உதவியது.
1920 களில் நடேசய்யர் தொடங்கி வைத்த தொழிற்சங்க கட்டமைப்பு காரணமாக 1931 இல் சர்வஜன வாக்குரிமை வழங்கும்போதே அதனைப்பெற்றுக் கொண்ட சமூகம். அதன் ஊடே சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தோம்.
1948 ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியுரிமைப் பறிப்பு காரணமாக அரசியல் உரிமை மறுக்கப்பட்ட போது தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாக தமது உரிமைகளை போராடி வென்ற சமூகம். அதன்பின்னர் 1977 ஆம் ஆண்டுமுதல் அமைச்சுப்பதவி அரசியலினூடாக ஏற்றமும் இறக்கமுமான அரசியலை முன்னெடுத்து வந்துள்ளது.
இந்த அரசியலுக்கு அடிநாதமாக அமைந்தது தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த வேர்வையாலும் உழைப்பாலும் செலுத்தி வரும் சந்தா பணமாகும்
எனவே நூற்றாண்டு காலமாக தமது சந்தா மூலம் மலையக அரசியலை முன்னகர்த்திச் சென்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து இனி மேலாவது அவர்களிடம் சந்தா வாங்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். மலையக அரசியல் அரங்கம் தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா பெறாத தொழிற்சங்க கட்டமைப்பை அறிமுகம் செய்வதோடு ஏனைய தொழிற்சங்க அமைப்புகளையும் இந்தகலாசாரத்தினைத் தொடருமாறு வேண்டுகிறது எனவும் தெரிவித்தார்.
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பின்வருவோர் உத்தயோகத்தர்
சபைக்குதெரிவு செய்யப்பட்டுள்ளனர் தவிசாளர் : மயில்வாகனம் திலகராஜா தலைவர் : ஜெகநாதன்பொதுச் செயலாளர் : ஆர். பாலசேகர் மகளிர் அணித்தலைவி : சந்திரலேகா
நிதி மற்றும் நிர்வாகப் செயலாளர் : நா. கிருஷ்ணகுமார் பிரதிப் பொதுச் செயலாளர் : நாதன் சுரேஷ் குமார் உபதலைவர்கள் ராஜசூரி சிவன் சுப்பிரமணியம் மல்லிகா தேவி உதவி செயலாளர்கள்
மகளிர் அணி செயலார்இதயஜோதி வினோத் சுந்தர்
செயற்குழு உறுப்பினர்கள் : தியாகராஜா (தொழில் உறவுகள் ) இரா. வினோத் .( நிதி 🙂 விக்னேஸ்வரி (நிர்வாகம்) ரஷீதா (சுயதொழில்) விமலன் (சிவில் சமூக இணைப்பாளர்)
தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர் சபை உறுப்பினர்களுக்கு சி.வி. வேலுப்பிள்ளை நினைவிடத்தில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
மலைவாஞ்ஞன்