2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் எட்டுப் பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதுடன் 32 மாணவர்கள் ஏழு பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 115 மாணவிகள் ஒன்பது விசேட சித்திகளை பெற்றிருந்தனர்.
கடந்த முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்
நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் (G.C.E O/L Exam) பெறுபேறுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளிாகியுள்ளன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) மாணவர்கள் இருவர் 9 பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்த வகையில், கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களுமே இவ்வாறு சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களின் விபரங்கள் வருமாறு,
பிரான்ஸிஸ் சேவியர் – 8A B, மகேஷ்வரன் கஜப்பிரியன் – 8A B, ஜீவானந்தன் ஜதுமிதன்- 8A C, முகுந்தன் கஜரதன் – 7A B C, ஜெயசீலன் ரிதிக்ரோஷன் – 7A B C, சிவமூர்த்தி ஆகாஷ் – 7A B C, கிறிஸ்டி ஜான்சன் வசந்தன் – 7A B C, பிளட்டன் ஜூட் ஜெனிஸ்ரன்-7A B C,ஹரீஸ்வரன் நிலக்சன் – 6A 2B C, மௌலேஸ்வரன் விதுர்ஜியன் – 6A 2B C, சுரேஷ் விபுசன் 6A B 2C, ரஜீதன் டஜுசன் – 5A 2C 25, குமாரவடிவேலு துஷான் – 5A 3B C ஆகியோர் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.