இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெத்சர மற்றும் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியின் விமன்சா ஜயனாதி ரத்னவீர ஆகியோர் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் பெறுபேறுகளின் படி, மூன்று மாணவிகள் நாடளாவிய ரீதியில் நான்காம் இடத்தை பெற்றுள்ளனர்.
கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் சேஷானி செஹன்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சாமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த பெண்கள் கல்லூரியின் நடுன் பமுதித ரணவக்க ஆகியோரே இவ்வாறு நான்காம் இடத்தை பெற்றுள்ளனர்.
ஏழாவது இடத்துக்கு நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனர அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தசரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கலா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சன விக்ரம, மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுனசதீஷன் சமரவிக்ரம ஆகிய நான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.