2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாய ராஜபக்ச பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் சிறந்த புகைப்படமாக தெரிவாகியுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த புகைப்படமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி அன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் அதிபர் மாளிகையை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, இந்த புகைப்படமானது அபிஷேக் சின்னப்பா என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.