நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான வௌியாகவிருக்கும் பராசக்தி படம் வௌியாகும் திகதி மற்றும் அதற்கான முன்னோடி நிகழ்வில் அவர் ஆற்றிய உரை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் சிவாஜி கணேஷ், சிவகார்த்திகேயனுக்கு தீ பந்தத்தை கொடுப்பது போல புகைப்படம் ஒன்று அளிக்கப்பபட்டது. அதை பற்றி பேசிய சிவா ‘இது மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம்,அவரளவுக்கு நடிக்க யாராலயும் முடியாது, இனியும் வரவும் முடியாது. ஆனா, அவர் பெயரை காப்பாத்த வேணும்ங்கிற பொறுப்பு இருக்கு, நிச்சயம் அவர் பெயரை காப்பாத்துவேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல் நடிகர் விஜய் நடித்த தீ கோட் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு கௌரவ வேடமொன்று வழங்கப்பட்டிருந்ததோடு அதன்போது விஜயின் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் வழங்கிச் செல்லும் காட்சி அதிகம் பேசப்பட்டது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் விஜயின் இறுதிப் படமென கூறப்படும் ஜனநாயகன் வௌியாகும் திகதியிலேயே சிவகார்த்திகேயனிக் பராசக்தி படம் வௌியாவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்திருந்தனர்.
அதேநேரம் இப்போது அவர் சிவாஜியின் பெயரை காப்பாற்றுவேன் என்று கூறியிருப்பதால் ரசிகர்கள் மேலும் ஆவேசமடைந்திருப்பதுடன் சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயனுக்கு எதிரான பதிவுகளை அதிகம் இட்டு வருகின்றனர்.
“எது எவ்வாறாயினும் சினிமா நமது வாழ்வியலில் கலந்திருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்ற புரிதலுடன் ரசிகர்கள் செயலாற்றுவது சிறந்தது என்பதை கருடன் வலியுறுத்துகிறது”




