2017 தொடக்கம் 2018 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பருவ யாத்திரை, நாளை அதிகாலை (30) இடம்பெறவுள்ள விசேட பூஜைகளுக்கு பின்னர் நிறைவடையவுள்ளது.
இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரையில் நாடாளாவிய ரீதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் அட்டன் வழியாக இன்றும் ஆயிரக்காணக்கான யாத்ரீகர்கள் சிவனொளிபாத மலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாளையுடன் சிவனொளிபாத மலை பருவ யாத்திரை நிறைவடையவுள்ளது.