நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று (17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்றது.
நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன், மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் ஆகியோரின் விசேட அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாபா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து இன்று காலை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.