சீனநாட்டு பெண்மணியின் சடலம் நுவரெலியாவில் மீட்பு!!

0
110

சீனநாட்டு பெண்மணியின் சடலம் நுவரெலியாவில் மீட்பு.சீனநாட்டு பெண்மணியின் சடலம் ஒன்று நுவரெலியாவில் உள்ள விருந்தகம் ஒன்றின் அறையில் இருந்து மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் 15.02.2018 வியாழகிழமை காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. குறித்த சீன நாட்டு பெண் தனது குடும்பத்தாரோடு சுற்றுலாவிற்காக நுவரெலியா பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவருடன் வந்த ழூன்றுபெண்கள் வேறு ஒரு அறையிலும் மற்றுமொரு பெண் தனியாக வேறு ஒரு அறையிலும் நித்திரை செய்ய செய்துள்ளதாகவும்

தனிமையில் நித்திரை செய்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இவ்வாறு சடலமாக மீட்கபட்ட சீன நாட்டு பெண் 47வயதுடைய டாய்குயின் என்ற பெண்ணே சடலமாக மீட்கபட்டுள்ளதாக அடையாளம் கானபட்டள்ளது .

குறித்த பெண்ணின் மரணவிசாரனைக்காக நுவரெலியா நீதவான் வரவலைக்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் மரண பரீசோதனைக்காக சடலம் நுவரெலிய ஆதார வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சடலமாக மீட்கபட்ட பெண்ணின் உறவினர்களை இலங்கைக்கு வரவழைத்து சடலம் ஒப்படைக்கபட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here