சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

0
52

சீனாவில் (China) நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம் (Guangdong Province), மெய்ஷூ நகருக்கு (Meishu City) அருகே மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையில் சுமாா் 18 மீற்றர் பரப்பு புதன்கிழமை (01) நொறுங்கி பள்ளத்தில் சரிந்தது.

இதில், வீதியில் சென்று கொண்டிருந்த சுமாா் 20 வாகனங்கள் சரிவில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.எனவே அந்த வாகனங்களில் இருந்த 24 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனா்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளனர்.இதேவேளை நெடுஞ்சாலை திடீரென உடைந்து நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here