இந்த நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் நாட்டின் அபிவிருத்தியையோ இன பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வையோ பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக தெரியவில்லை என்கின்றார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரரதாகிருஸ்ணன அவர்கள்.மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04.05.2018) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி கரன்யா சுபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெறிவித்தார்.
இந் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளாலருமான எம்.உதயகுமார் சிறப்பு அதிதிகளாக வளயக் கல்வி பனிப்பாளர் கே.பாஸ்கரன் உதவி கல்வி பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் கல்குடா திருமதி மிலி ரவிராஜ் பாடசாலையின் முன்னால் அதிபர்கள். பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் பழைய மாணவ சங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த பரிசளிப்பில் தரம் 05 புலமைபரிசில் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களும் பாடசாலையின் இனைபாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்ளும் பாட ரீதியாக கற்றலில் முதன்மை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கபட்டு சான்றிதழ்கள் பரிசில்கள் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கபட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர். இந்த நாட்டில் அபிவிருத்தியும் குறிப்பாக இன பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் இந்த பிரதமரையும் ஜனாதிபதியையும் வாக்களித்து கொண்டு வந்தோம் அதேபோல் நானும் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
ஆனால் தற்போது அது நடைபெறுவதாக தெறிவில்லை இருவரும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலும் அதனை புனர்த்தாபனம் செய்வதிலேயே இருக்கின்றனர். அபிவிருத்திகள் பின்னடைவை நோக்கி செல்கின்றது. இன பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதிலும் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. அதற்கான அழுத்தமும் இல்லை.
அது மட்டும் அல்ல படித்தவர்களுக்கு வேலையாப்புகள் உட்பட மக்களின் அடிப்படை தேவைகள் எவ்வளவோ பூர்த்தி செய்யாமல் இருக்கின்றது. இவ்வாறு தொடர்ந்து செல்லுமாயின் இந்த நாட்டின் எதிர்காலம் உட்பட மக்களின் வாழ்வு நிலை பாதிப்பை நோக்கி செல்லும் எனவே பிரதமரும் ஜனாதிபதியும்; தங்களது கட்சிகளை வளர்ப்பது போல் அபிவிருத்திக்கும் இன பிரச்சனைக்குமான தீர்வினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும் அதற்கான பூரண அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க முடியும் என்று கூறினார்.