ஜப்பான் இசு தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
22

ஜப்பானில் உள்ள இசு தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அந்நாட்டு வானிலை திணைக்களம் சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதன்படி, இசு தீவுகள் மற்றும் ஒகவசர தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீவுகளில் ஒரு மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here