ஜூலையில் பஸ் கட்டணம் குறைப்பு?

0
130

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேருந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரூபாயின் பெறுமதி உயர்வினால் உதிரி பாகங்களின் விலைகள் குறைவடையும் எனவும், உலக சந்தையில் பேட்டரிகள் மற்றும் பல வாகன உதிரிபாகங்களின் விலைகள் தமது அறிவின் படி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் பஸ் கட்டணத்தை தீர்மானிக்கும் போது இந்த காரணிகள் கருத்தில் கொள்ளப்படும் என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here