தனியார் மற்றும் அரசாங்க பஸ்களில் அதிகம் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்!!

0
98

இரத்தினபுரி மாவட்டத்தில் சேவையில் இயங்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் நடத்துநர்கள், பயணிகளிடம் அதிகக் கட்டணத்தை வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, இறக்குவாணை, பலாங்கொடை, எஹலியகொடை, குருவிட்ட, கொலன்ன, எம்பிலிப்பிட்டிய, பெல்மதுளை, களவான நிவித்திகல, கொடக்கவெல ஆகிய நகர பகுதிகளில் சேவையில் இயங்கும் பஸ் வண்டிகள் மற்றும் அதரன அண்மித்த தோட்டப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் மற்றும் இ.போ.ச பஸ் வண்டிகளில் குறிப்பிட்ட தொகையைவிட, கூடுதலான தொகையைப் பெற்று வருவதாகவும் மற்றும் மிகுதி பணம், பற்றுச்சீட்டு என்பன வழங்கப்படுவதில்லை என்றும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே பொதுமக்களின் பணத்தை சூரையாடும் பஸ் வண்டிகளின் நடத்துநர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here