தன் மகனை கொலை செய்து உணவாக உண்ட தாய்! அதிர்ச்சி சம்பவம்

0
56

ஹனா மொஹமட் ஹசன் என்ற 29 வயதுடைய குறித்த தாயே இவ்வாறு தனது ஐந்து வயது மகனை அடித்து கொலை செய்துள்ளார்.

எகிப்தில் தனது ஐந்து மகனை கொலை செய்து சமைத்து உணவாக சமைத்து உன்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இந்தசம்பவம் அந்த பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஹனா மொஹமட் ஹசன் என்ற 29 வயதுடைய குறித்த தாயே இவ்வாறு தன் மகனை அடித்து கொலை செய்துள்ளார்.

தாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து, தனது சொந்த வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

இவர் தனது மனனை திட்டமிட்டு கொலை செய்துள்ளதுடன் சமைத்தும் உண்டுள்ளார்.மேலும், இந்த கொலை சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ள நிலையில், விசாரணைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் அந்நாட்டு பொலிஸாரினால் வெளியிட்டப்பட்ட அறிக்கையின் பிரகாரம் குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என உறுதிசெய்யப்பட்டுளள்ளது.மேலும், தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்து, அவரது உடலைச் சிறு சிறு பாகங்களாக துண்டித்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா வந்துள்ளார்.

அங்கிருந்த வாளி ஒன்றில் உடல் உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். இதையடுத்து அவர் பொலிஸாருக்கு தகவல் அளித்த பிறகே இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அந்த பெண், தனது மகன் மீண்டும் கர்ப்பபைக்கு திரும்பிவிடுவான் எனவும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here