றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!

0
3
toronto.citynews.ca

றொரண்டோ (Toronto) நகரின் போர்ட் யார்க் (Fort York) மற்றும் த பென்ட்வே (The Bentway) பகுதியில் புதன்கிழமை மாலை FIFA உலகக் கிண்ண கவுண்ட்டவுன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்போது, அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) பறக்கவிட்ட இரண்டு பேர் மீது றொரண்டோ பொலிஸார் (TPS) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலாவது ட்ரோன் இரவு 7:45 மணியளவில் டெகும்செத் மற்றும் நயாகரா (Tecumseth and Niagara streets) வீதிகளுக்கு அருகிலும், இரண்டாவது ட்ரோன் இரவு 9:15 மணியளவில் ஆர்ட்னன்ஸ் மற்றும் ஸ்ட்ராச்சன் (Ordnance Street and Strachan Avenue) பகுதிகளுக்கு அருகிலும் பறந்துள்ளன.

அவை பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கனடிய விமான போக்குவரத்து விதிகளின் (Canadian Aviation Regulations) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டரங்குகள், அணிகள் தங்கும் இடங்கள் மற்றும் FIFA ரசிகர் திருவிழா (FIFA Fan Festival) போன்ற பாதுகாக்கப்பட்ட வான்வெளிகளில் அனுமதியின்றி ட்ரோன்களைப் பறக்கவிட வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரையன் ஆடம்ஸ் (Bryan Adams) மற்றும் த பீச்சஸ் (The Beaches) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுடன் றொரண்டோ, மெக்சிகோ சிட்டி (Mexico City), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) ஆகிய நகரங்களில் இந்த உலகக் கிண்ணத் தொடக்க விழா ஒரே நேரத்தில் அரங்கேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here