தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கம் உறுவாவதற்க்கும் அமைவதற்கும் பெரும் காரணமாக இருந்துள்ளது. அதனால் அரசாங்கத்துடன் பேரம் பேசி மலையக மக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளயும் பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது. அதன் அடிப்படையில் மலையத்தில் தற்போது கல்வி உட்பட பல்வேறு உட்கட்மைப்பு வசதிகள் அபிவிருத்தி வீடமைப்பு வசதிகள் போன்றன அபிவிருத்தி அடைந்து வருகின்றது. அவ்வாறான சந்தர்பத்தில் மலையகத்திற்கான இந்திய பிரமரின் விஜயம் மலையக மக்களை உலகிற்கு தெரிந்துக் கொள்ள பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
தொடர்ந்து இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவரின் வருகையின் பின்னர் மலையத்தில் 10.000 வீடுகள் அமையவிருப்பதும் கல்விதுறையில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட இருப்பதும். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த ஒரு பாரிய வெற்றியாக கருதுகின்றேன். இதற்கு காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 06 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்களில் 02 கெபினட் அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் காணப்படுவதாகும். எந்த ஒரு அரசாங்கமும் அதன் ஆட்சி அமைப்தற்கு காரணமான பங்காளர் கட்சிகளுடனே செய்படும். அதே போல் வெளிநாட்டு உதவிகள்¸ உட்பட இராஜதந்திரிகளிலுடான செயற்பாடுகளும்
அவர்களுடனே மேற்க் கொள்ளும். அந்த வகைளில் இந்திய பிரமரிடம் ஏற்கனவே நாங்கள் 25.000 வீடுகள் கேட்டதற்கு இணங்க முதற் கட்டமாக 10.000 வீடுகள் கிடைக்க பெற்றமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதுகின்றேன்
பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி எழுத்துமூலமாக முன்வைத்த சமூகஇ பொருளாதாரஇ கலாச்சார கோரிக்கைகள்
1) லயன்கள் ஒழிக்கப்பட்டு தனி வீடமைப்பு திட்டத்துக்கான மேலதிக ஒதுக்கீடு
2) மலையக பாடசாலைகளுக்கு தேவையான விஞ்ஞானம்இ கணித பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க தமிழ் மொழியிலான பயிற்சி கலாசாலையும்இ அதற்கான இந்திய பயிற்சியாளர்களும்
3) மலையக பாடசாலைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு உதவிகள்
4) தமிழ் மொழியிலான நவீன தொழில் பயிற்சி கலாசாலை
5) மலையக பல்கலைக்கழகம் – பிரபல இந்திய பலகலைக்கழகம் ஒன்றின் இணைவுடன் முதற்கட்ட பீடங்களை அமைத்து ஆரம்பிக்க வேண்டும்.
6) பல்கலைக்கழக தகைமை பெற்ற மலையக மாணவர்களுக்காக முழுமையான புலமைபரிசிலுடன் கூடிய இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி வாய்ப்பு
7) கடந்த ஆட்சியில் 2013ம் வருடம் கையெழுத்து இடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்திய அரசிற்கும்இ இலங்கை அரசின் மொழித்துறை அமைச்சுக்கும் இடையிலான மொழிகொள்கை அமுலாக்கல் தொடர்பான ஒத்தாசைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
பா.திருஞானம்