தலவாக்கலை நகரில், நேற்று இரவு குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முச்சக்கர வண்டி சாரதியை அணுகிய சிலர் தாம் மிடில்டன் வீடமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும் எனவும் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று திடீரென முச்சக்கரவண்டி சாரதியை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காயமுற்ற சாரதி தலவாக்கலை போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் மற்ற நால்வரும் தலைமறைவாகியுள்ளனர்.
தன்னை தாக்கியவர்கள் போதையில் இருந்தனர் என சாரதி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கியமைக்கான காரணம் என்னவென்று தனக்கு தெரியாது என்றும் தாக்குதலுக்கள்ளான சாரதி மேலும் கூறினார்.
தாக்குதலுக்கு இலக்கான சாரதி, லிந்துலை வைத்தியசாலையில் ஏற்கப்பட்டப்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.