தீராத தலைவலி – தலைப்பாரம் – கழுத்துவலியா?? இனி கவலையே வேண்டாம் – இதுதான் சிறந்த வழி

0
28

நீண்ட காலமாக தலைவலி, தலைப்பாரம் மற்றும் கழுத்து வலி காரணமாக அவதிப்படுபவர்களுக்கு ஒரு ரூபா கூட செலவில்லாமல் தீர்த்துக் கொள்வதற்கு சிறந்த தீர்வாக இயற்கை வைத்தியம் உதவுகின்றது.

அதனை எவ்வாறு பயன்படுத்துவது?? அதனால் கிடைக்க கூடிய நன்மைகள் தொடர்பிலும் பார்ப்போம்.

உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துடைக்காமல் விடுதல் ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.

பலருக்கு தற்போது நாள் முழுவதும் கணினி முன்பு உட்கார்ந்து பார்க்கும் வேலை இருப்பதால் கழுத்து வலியினால் அவதிப்படுவார்கள்.

மேலும், ஒரு சிலருக்கு தலையில் நீர்கோத்து தலை பாரம், எந்நேரமும் மூக்கில் நீர் வடிதல், சளி மற்றும் தடிமல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் இந்த வைத்தியம் ஒரு அற்புதமான தீர்வினை உடனடியாக கொடுக்கினறது.

இதனை செய்வதற்கு மண்ணாலான ஒரு தோசை கல்லை எடுத்து கொள்ளுங்கள். உங்களிடம் தோசை கல் இல்லையெனில் மண்ணாலான விளக்கு அல்லது மண் சட்டியை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனை அடுப்பில் அதிகப்படியான தீயில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு சூடு செய்து கொள்ளவும். மண் பாத்திரம் சூடாகியதும் அதன் மீது ஒரு காட்டன் துணியை குண்டாக உருட்டி அதன் மீது வைக்கவும்.

உங்களால் பொறுக்கும் அளவுக்கு சூடுபிடித்ததும் பின்பு வலி இருக்கும் இடத்தில் அந்த துணியை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.

மூட்டு வலியாக இருந்தால் மூட்டு பகுதியிலும், தலைவலி என்றால் தலையிலும் அல்லது தலைப்பாரம் என்றால் நெஞ்சு பகுதியிலும் இந்த ஒத்தடத்தை கொடுக்கவும். இந்த சூடு உங்கள் உடலில் ஏறும் போது உடலிலுள்ள கெட்ட எல்லா வெளியேறி வியர்க்க ஆரம்பிக்கும்.

மண்ணால் ஆன பொருட்களில் இருந்து கிடைக்கும் சூட்டிற்கு அத்தனை மருத்துவ பயன்கள் உண்டு. வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய அற்புதமான ஒரு மருத்துவமாகும்.

இதனை தொடர்ந்து மூன்று முறை செய்யும் போது நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். தலையில் நீர்கோத்து இருந்தாலும் அந்த நீர் அனைத்தும் வெளியேறி விடும். மேலும் அதனால் உண்டாகும் தலைவலியும் சரியாகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here