அட்டன் ருவன்புர கிராமத்தில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு விஜயம் செய்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரைச்சந்தித்து ஆறுதல் கூறினார்.
ருவன்புர கிராமத்தில் நேற்று 29 ஆம் திகதி இரவு இடம் பெற்ற திடீர் தீ விபத்தில் தனி வீடொன்று முற்றாக எரிந்து சபம்பலாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்தச்சம்பவத்தை கேள்வியுற்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ருவன்புர வட்டார அமைப்பாளர் சிவஞானத்துடன் ருவன்புர கிராமத்துக்கு இன்று 30. ஆம் திகதி மாலை விஜயம் செய்தார்.
இதன் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பொருளாதார தேவையைக்கருதி சுயத்தொழிலுக்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்