துருக்கி இராணுவப் புரட்சி முடிவுக்கு வந்தது: 42 பேர் மரணம்!

0
141

அங்காரா – துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கிய இராணுவத்தில் ஒரு பிரிவு அதனை நிறைவேற்ற முடியாமல் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், புரட்சியில் ஈடுபட்டவர்களில் 50 இராணுவ வீரர்கள் சரணடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்தான்புல் காவல்துறைத் தலைமையகத்தைக் கைபற்றும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததாக அங்கிருக்கும் மாணவர்கள் ஸ்டார் இணையதளத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தில் அங்காராவில் 47 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் காவல்துறையினர் என அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் கூறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here