பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.