இலங்கை தேயிலை சபையின் புதிய தலைவராக லுசிலி விஜயவர்தன பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினரான லுசிலி விஜயவர்தன வர்த்தக நிர்வாகம் தொடர்பான தமது முதுமாணி பட்டத்தை ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
ஹோலீஸ் பிளான்டேனஷன்ஸ் நிறுவனம், தலவாக்கலை பிளான்டேஷன்ஸ் நிறுவனம், புஸல்லாவ பிளான்டேஷன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
இலங்கைத் தேயிலைச்சபையின் தலைவராக செயற்பட்ட ரொஹான் பெதியகொட, புதிய தலைவரின் நியமனத்தை வரவேற்றுள்ளார்.
புதிய தலைவர் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவரென கூறப்படுகின்றது. எனினும், கல்வித்துறையில் அவர் மிகவும் தேர்ச்சிபெற்றவரென்பதால் சிறப்பான பங்களிப்பை வழங்குவாரென்றே தெரிவிக்கப்படுகின்றது.
(பாண்டியர்)