பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து திணைக்களம் (Department of Railways) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை (29) ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் மக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.