தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு

0
140

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் இவ்வருட மகளிர் தின விழா 12 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா என்பீல்ட் தாயகம் மண்டபத்தில் இடம் பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவி திருமதி. சரஸ்வதி சிவகுரு அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விசேட அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், பிரதி பொதுச் செயலாளர் கல்யாணகுமார், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் வைலட்மேரி உட்பட மகளிரணி அங்கத்தவர்கள், தொழிலாளர் தேசிய சங்கப் பணிமனை பெண் உத்தியோகஸ்தர்கள், மாவட்ட தலைவிகள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், தோட்ட கமிட்டி தலைவிகள், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு உரைகள் ,கௌரவிப்புகள் உட்பட பல நிகழ்வுகள் இடம் பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here