பெருந்தோட்ட மக்கள் எப்படி வாழ்கின்றனர் அந்த வாழ்க்கை அனைத்தும் எனக்கு தெரியும.; நான் தோட்டத்தில் இருந்து கொழும்பு சென்று சுயமாக சம்பாதித்து அங்கயே நல்லா வாழ முடியும். நான் அப்படி செய்யவில்லை நான் பட்ட கஸ்ட்டதை இந்த மக்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காகவும் இந்த மக்களுக்கு செய்கின்ற துரோக வேலைக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதற்காகவும் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் சமூக சேவை செய்து அரசியலுக்கு வந்தேன். இந்த மலைய மக்களின் எழுச்சிக்காக பாடுபட்ட மலையத்தின் மலையகத்தின் தலைவர்கள் எத்தனையோ பேர் இருகின்றார்கள். அந்த வலையில் இந்தியாவில் இருந்து வருகைதந்து மலைய மக்களை தொழிற் சங்க ரீதியாக ஒன்றினைத்தவர் நடேசன் ஐயர் அவர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆரபித்தவரும் ஆரம்பகால உறுப்பினருமான அமரர் கே.இராஜலிங்கம் இந்த பிரதேசத்தை சேர்ந்த புஸ்ஸல்லாவ சங்குவாரி தோட்டத்தை சேர்ந்தவர். அதே போல் வி.கே. வெள்ளையன் அவர்கள் கண்டி திருத்துவ கல்லூரியில் படித்த மலையத்தை சேர்ந்த ஒரு ரகர் விளையாட்டு வீரர். அவரும் மலைய மக்களின் அபிவிருத்திக்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இவர்களை பற்றி யாரும் பேசுவதும் இல்லை நினைவு கூறுவதும் இல்லை ஆனால் இவர்கள் தான் மலையத்தின் உண்மையான கதாநாயக தலைவர்கள். அவர்களிடம் பணம் இருக்கவில்லை. அதனால் தான் அரசியல் ரீதியாக முன்னோக்கி செல்ல முடியாமல் இருந்தது. அனால் அதற்கு பின்னர் வந்த தலைவர்கள் பணத்தை வைத்து விளையாட்டுகளை காட்டி மக்களை முன்னேற்ற பாதைக்கு செல்ல விடாமல் இலயத்து வாழ்க்கைக்கு அடிமையாக்கி சாக விட்டார்கள். அதற்கு பிரகு வந்த தலைவர்களில் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தனி வீட்டு திட்டத்தை ஆரம்பித்தார்.
மக்களின் வாழ்வில் உணர்வு பூர்வமாக செயற்படுவதற்கும் வழி வகுத்தார். அவரையும் நினைவு கூறுவதை மறந்து விட்டனர். இவர்கள் அனைவரும் மலையத்திற்காக உயிர் நீத்தவர்கள் இந்த அனைத்து தலைவர்களையும் மறந்து விட்டு யாரே ஒருவரை கூறிக் கொண்டு இருகிறார்கள். என்று கூறுகிள்றார் மலைநாட்டு புதிய கிராமங்கள்¸ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்; பழனி திகாம்பரம் அவரகள்.
இந்திய உதவியுடன் பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு 4000 வீடுகள் அமைப்பதற்கான செயற்திட்டத்தில்; இறம்பொடை ஹெல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வைபவ ரீதியாக (03) நடைபெற்றது. இதன் போதே மேற்படி கருத்தினை அமைச்சர் தெரிவித்தார
.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் “தரன்ஜித் சிங் சந்து” கலந்துக் கொண்டார் இவருடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன்¸ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ்¸ மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்¸ எம்.ராம் உட்பட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வி.புத்திரசிகாமணி¸ பெருந்தோட்ட கம்பனியின் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் மேலும் 10.000 வீடுகள் கட்டுவதற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அன்மையில் குறிபிட்டுள்ளமையும் குறிபிடதக்கது. மலையகத்திற்கான விஜயத்தின் போது குறிப்பிட்டு இருந்தார் இதன் படி மலையகத்தில் மொத்தமாக 14000 வீடுகள் அமைக்கபடவுள்ளன
தொடர்ந்து கருத்து தெரிலித்த அமைச்சர் அவர்கள். தற்போது தான் கொழும்புக்குச் சென்று பணம் சம்பாதித்துக் கொண்டு பணத்துடன் மலையகத்தில் சேவை செய்ய வந்துள்ளேன். எனக்கு தெரியும் பணம் இல்லாமல் வந்தால் இந்த மலையக தலைவர்கள் நம்பலை அடித்து விரட்டி விடுவார்கள் என்று நான் அரசியலுக்கு வந்து 14 வருடமாகின்றது. இந்த காலபகுதியில் எவ்வளவோ பிரச்சனைக்கு முகம் கொடுத்து அவமானம்பட்டு இருக்கின்றேன். எனது அம்மா அப்பா தோட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு மண்வெட்டியையும் பிடிக்க தெரியும்¸ சுரண்டியையும் பிடிக்க தெரியும்¸ கொழுந்தும் எடுக்க தெரியும். அதனால் தான் எனக்கு இந்த அளவுக்கு வளர வாய்ப்பு கிடைத்தது.
நான் கொழுப்பில் வேலை செய்யும் பொழுது நண்பர்கள் கேட்பார்கள் உங்கள் ஊர் எது என்று நான் சொல்லுவேண் தலவாகல்ல என்று மடக்கும்புர தோட்டதை சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு வெட்கம்¸ அவர்களை இலயத்திற்கு கூட்டிச் செல்ல முடியாது. இவ்வாறான சந்தர்பத்தில் நான் ஒரு சந்தர்ப்பததை எதிர்பார்த்தேன். அது தான் இந்த அரசியல் பிரவேசம். மஹிந்த ஆட்சி காலத்தில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டார்கள் பல பில்லியன்களை தருவதாகவும் கூறினார்கள் நான் செல்லவில்லை. நல்லாட்டசி அரசாங்கம் உருவாக காரணமாக இருந்தோம் அதன் பயனாக இந்த அமைச்சு கிடைத்தது.
இதை வைத்துக் கொண்டு மலையக மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவேன். துற்போது எனது அமைச்சின் ஊடாக ஏழு பேர்ச் காணி வழங்கி 3000 வீடுகள் அமைக்கபட்டுள்ளன. தற்போது இந்த வீடுகள் மேலும் அதிகரிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடித்தலம் போட்டு இருக்கின்றார். ஜனவரி மாதம் அளவில் 50.000 வீடுகள் அமைப்பதற்கான அடித்தளம் போடப்படும். ஆரம்பத்தில் இருந்து இந்தியா அரசாங்கம் பல்வேறு உதவிகளை மலையக மக்களுக்கு செய்திருக்கின்றது. அனாhல் சில தலைவர்கள் அதனை சொல்லவில்லை. அதனை கட்சி வளர்ச்சிக்கும் தொழில் சங்க வளர்ச்சிக்குமாக பயன்படுததினர். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. போகும் இடங்கள் எல்லாம் இந்தியாவின் உதவிகள் பற்றி சொல்லி வருகின்றோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நோர்வுட் மைதானத்திற்கு வரும் பொழுது இந்திய உயர்ஸ்தானிகர் என்னிடம் கூறினார் எந்தவிதமான பிரச்சனையும் வரக் கூடாது என்று அதனால் அமைதியாக இருந்தோம். ஆனால் ஒரு சிலர் ஆயிரம் பேரை கொண்டு வந்து எனது பெயரை கூறும் போது கூச்சலிட்டனர் எனக்கும் முடியம் இரண்டாயிரம் பேரை கொண்டு வந்து அவர்களை விரட்டி அடிக்க ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் நாகரீகமாக செயற்பட்டோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை முறையாக வரவழைத்து திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்காக என்று கூறினார்.
பா. திருஞானம் .