நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மகிந்த ராஜபக்ஷ

0
109

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவை திருகோணமலையில் கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்திருந்தார்

இந்நிலையில், இன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும், மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here