இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டில் காணப்படும் அனைத்து சிறைச்சாலைகளிலும் சுமார் 13200 கைதிகளை தடுத்து வைக்க முடியும். எனினும் தற்பொழுது சுமார் 26000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 13300 பேர் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறைச்சாலைகளில் 10000 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எனவும், ஏனைய 16000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட 1177 கைதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.