நாரதனுக்கு கசிந்த கதை!

0
81

மலைமுகட்டில் களையிழந்து தவழ்ந்த நிலையிலிருந்த அந்த சங்கம் இப்போ எழுந்து நடக்க தொடங்கியதும் இப்போ உள்வீட்டுக்குள் நீயா நானா? என்ற தோரணையில் மூன்று பிரிவினர் முண்டியடிக்கின்றனராம், அதில் ஒரு பகுதி கூட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு சாதிப்போம் என்கிறதாம் இன்னொரு பகுதி தனித்து களம் காண்போம் என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறதாம்? சேகரத்தாரின் வாரிசு இன்னொரு பக்கம் என்னத்த திட்டம் தீட்டினாலும் அது அங்கு  எடுபடுவதே   இல்லையாம்” அந்த சங்கத்தின் தலைமை ஆசிரியர் தன் வாரிசு எப்படியோ இந்த தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கோடு காய் நகர்த்தி வருகிறாராம்” ஆனால் இந்த சங்கத்தை வளர்த்தவர்கள் கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலைக்குள் ஆமா சாமி” என்ற நிலையில் இருக்கிறார்களாம், எல்லாம் தமது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதே என்ற புலம்பலை கேட்கமுடிகிறதாம், அந்த நிலா சேகரனின் சிஷ்யர்களை மீறி அது அற்ற குளத்தில் இருந்து வந்த பறவைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பல பேர் மதில் மேல் பூனைகளாக இருப்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்? ராதையின் நெஞ்சமே ராமுக்கே சொந்தமே” என்ற வகையில் வாரிசின் மவுசை அதிகரிக்க மட்டும் திட்டம் சரியாக செயற்படுதாம், ஆனால் அந்த அரவிந்தர் இதற்கு மேல் எகிறி குதிக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்காறாம்” இது நாரதருக்கு காதும் காதும் வைத்தாற்போல வந்த கதைதான்.
” நாரதன் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here