நீர்வளங்கல் திணைக்களத்தின் அதிகாரிகளை திருப்பியனுப்பிய தோட்டமக்கள் – நுவரெலியாவில் சம்பவம்!!

0
153

நுவரெலியா மார்காஸ் தோட்ட மக்களை சுதந்திரமாக வாக்களிக்க இடம் கொடுங்கள் என தெரிவித்து  குடிநீர்
வழங்க வேலை திட்டத்தை ஆரம்பிக்க சென்ற நுவரெலியா மாவட்ட நீர்வளங்கல் திணைக்களத்தின்
அதிகாரிகளை அத்தோட்ட மக்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.இந்த சம்பவம் மார்காஸ் தோட்டத்தில்( 26) மாலை இடம்பெற்றுள்ளது.
தேர்தல் காலப்பகுதி ஒன்றில் எமது பிரதேச மக்களின் வாக்குகளை ஐ.தே.காவுக்கு  பெற்றுக்கொள்ளும்
வகையில் இந்த வேலைத்திட்டத்தை பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால்
ஆரம்பிக்கப்படவிருந்தது.

ஆனால்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கா ஐ.தே.கட்சியை சார்ந்தவர். இவருடைய நோக்கம் அபிவிருத்தி திட்டம் மட்டுமல்ல.ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மார்காஸ் தோட்ட மக்களின் வாக்குகளை பெற்று கொள்ளுவதும் நோக்கமாக இருந்தது.

தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே இருக்கின்றது.இந்த நிலையில் இவரின் ஊடாக செய்யப்படும் குடிநீர்
வேளைத்திட்டம் சாத்தியபடாது. என அத்தோட்ட மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஆகையால்  அமைச்சரின் தலைமையில் எமது தோட்டத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளை இவ்வாறாக
அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை நடைபெறுகின்ற உள்ளுராட்சி தேர்தலில் எமது தோட்டத்திற்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை
எதிர்காலத்தில் முன்னெடுக்கும் ஒருவரை நாம் சுதந்திரமாக வாக்களித்து தெரிவுசெய்யவுள்ளோம்.
கடந்த பலவருடகாலமாக இந்த தோட்டத்தின் மக்கள் அத்தோட்டத்தில் ஊற்றெடுக்கும் கிணற்றில் இருந்தே
குடிநீரை பெற்றுவருகின்றோம்.

இந்தநிலையில் இந்த குடிநீர் கிணற்றை புனரமைப்பு செய்து சுத்தமான குடிநீரை பெரும் வகையில் அபிவிருத்தி செய்து தரும்படி  அரசியல்வாதிகள் பலரிடத்திலும் கோரிக்கையை முன்வைத்து பல ஆண்டு காலமாகிவிட்டது.

இதனை நிறைவேற்றி தரக்கூடிய காலப்பகுதிகளை தவரவிட்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை
மையமாக கொண்டு இப்போது ஆரம்பிக்கவந்துள்ளமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும்.
அத்தோடு எங்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்யும் நடவடிக்கையாகும் என மக்கள்
தெரிவித்தனர். அதேவேளையில் எமது தோட்டமக்களின் வாக்குகளை சுதந்திரமாக பாவிக்கவிடாமல் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகள் பெற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நீர்வளங்கள் அதிகார சபை அதிகாரிகாரிளை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அனுப்பி வைத்தமையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

ஆகையால் தான் இவ்வதிகாரிகளை திருப்பியனுப்பியுள்ளோம். அத்துடன் எமக்கு நீர்வழங்கள் தொடர்பாக
அபிவிருத்தி பணிகளை செய்ய நல்ல மனதிருந்தால் எதிர்வரும் தேர்தலின் பின் அந்த அபிவிருத்தியை
முன்னெடுக்க வேண்டும் என அழைப்புவிடுவதாகவும் அத்தோட்ட மக்கள் கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here