தோட்டத் முதலாளிகளை வளர்க்கும் தொழிலாளிகளை மாற்றுவோம்- தலவாக்கலையில் தங்கராஜ் ராஜ்குமார்!!

0
121

நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்கு தனது நடு முதுகின் எழும்பை வலைத்து தேயிலை தொழிலை முன்னேற்றிவரும் எமது தோட்ட மக்கள் இதுவரை காலமும் அபிவிருத்தி இல்லாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.எமது தாய் தந்தையர்கள் மூதாட்டிகள் என தமது தொழிலுக்காக முன்னெடுக்கப்படும் தேயிலை தொழிலின் ஊடாக அரசியல் வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் அனுபவிக்கும் வகையில் மாதாந்தம் சம்பளத்தில் ஒரு தொகை பணத்தினையும் தமது வாக்குகளையும் இதுவரை காலமும் வழங்கி வந்துள்ளார்கள்.

இந்த நிலை மாற்றுவதற்காக காலத்தினை காட்டும் கடிகாரம் பதில் சொல்லும் என கொட்டகலை பிரதேச சபைக்கு தேர்தலில் போட்டியிடும் தங்கராஜ் ராஜ்குமார் தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் 150 வருட காலமாக எமது தாய் தந்தையர்கள் காப்பாற்றி வந்த தேயிலை செடிகள் தற்போது காடாகியுள்ளது. இதனால் எமது மக்கள் தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் இல்லாமல் மிகவும் கஸ்டபடுகின்றனர். இதற்கு காரனமாக இருந்தவர்கள் மலையகத்தின் தலைவர்கள் சமபள உயர்வின் போது எமது மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

பாதையில் இறங்கி போராடினார்கள் இறுதியாக ஏமாற்றமே இவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்
எமது மக்களை வழிநடத்தும் மலையக தலைவர்கள் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துகொண்டு அவர் அவர்கள் முகத்தில் கரியை பூசிகொள்கின்றனர்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பற்றி அவதானிப்பதில்லை எமது மக்களின் பிரச்சனைகளை பட்டியல் இட்டு காட்டலாம் தோட்ட தொழிலாளர்களை இன்று தோட்ட நிர்வாகம் நசுக்கி சார் எடுக்கின்றது.
தோட்ட அதிகாரிகளின் கெடுபிடியால் தனது தொழிலை நிறுத்திவிட்டு எத்தனையோ நபர்கள் தலை நகரத்திற்கு சென்றுள்ளனர்.

இதற்கு காரனம் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சந்தா வாங்கும் தொழிற்சங்க அதிகாரிகள்
கண்டுகொள்வதில்லை நான் தோட்ட தொழிலாளரின் பிள்ளை என்ற அடிப்படையில் எங்களுடைய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்தவன்.

எனவே இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எனது நோக்கம் எனவே கடிகார சின்னத்திற்கு வாக்களித்து என்னையும் வெற்றிபெற செய்வதன் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here