நுவரெலியாவில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு!

0
126

தெற்காசிய சிலம்பம் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களான நுவரெலியா புதிய நகர மண்டபத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை சிலம்பம் சம்மேளனம் மேற்கொண்டு இருந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கபட்டன.

A (4)A (2)

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். விசேட அதிதியாக முன்னாள் அமைச்சர் பசீர்சேகுதாவுத் முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி. மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் சர்வதேச சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் செல்வராஜ், தென்னிந்திய திரைப்படத்துறையின் ஸ்டன்ட் மாஸ்டர் பவர் பாண்டியன், இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் கந்தசாமி நாயுடு, செயலாளர் திவாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

D (5)C (1)

இந்த போட்டிகளில் இந்தியா நேபாளம் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து 72 போட்டியாளர்களும் எமது நாட்டில் இருந்து 70 போட்டியாளர்களும் கலந்து கலந்து கொண்டார்கள்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here