நுவரெலியா கல்வி வலயத்தில்; ஆசிரியர் இடமாற்றத்தில் பாராபட்சமும் அதிகார துஷ்பிரயோகமும்!

0
111

இலங்கை ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கமைய குறித்த ஒரு ஆசிரியர் ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் கடமை புரிய முடியாது என்பதாகும். எனவே 8 வருட கால சேவையை ஒரே பாடசாலையில் பூர்த்தி செய்த ஒருவர் வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செல்ல வேண்டுமென்பது சட்டம்.

ஆனால் நுவரெலியா கல்வி வலயத்தில் நடப்பது என்ன? 8 வருடத்திற்கு மேல் ஒரே பாடசாலையில் சேவை புரிவோரிக் கு இடமாற்றமில்லை. மாறாக 8 வருட சேவையை பூர்த்தி செய்யாதோருக்கே இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு எனன காரணம்? சிலர்
மேல்திக ஆசிரியர்கள் என அதிபர்களால் வலய கல்வி கறியாலயத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களுக்கமையவே இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நிர்வாகங்களோ கல்வி திணைக்களமோ செயற்படுவதில்லையென குற்றத் சாட்டப்படுகிறது.

ஆசிரியர் இடமாற்M சபையில் இம்முறை தமிழ் கல்வி அதிகாரிகளின் பங்கேற்பு மறுக்கப்பட்டிருந்ததோடு ஆசிரியர் தொழிற்சங்கங்களோ தத்தமது அங்க்கதவர்கள் தொடர்பிலேயே கூடிய கவனம் செலுத்தியிருக்கும். நுவரெலியா கல்வி வலய்ததலுள்ள் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கோட்டக் கல்வி பணிப்பாள்கள் மற்றும் தமிழ் கல்வி அதிகாரிகளிடமே முழுமையான தகவல்கள் இருக்கும். இந்திலையில் அவர்களின் பங்குபற்றலை தடுத்தது எந்த வகையில் நியாயமான செயல்? என பலராலும் வினவப்பட்டு வருகிறது.

அத்தோடு ஒரே பாடசாலையில் 6 வருட சேவையை முடித்த ஒரு சிலருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எந்த சுற்றறிக்கனமய இடம் பெற்றுள்ள தென்றும் அப்படியானால் 6 வருட சேவையை பூர்த்தி செய்த சகல ஆசிரியர் களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டுமென்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர். தம்மை தனிப்பட்ட நீதியில் பலி வாங்கும் செயலாகவே இதை கருதுவதாக அவர்கள் மேலும் கூறினர். பாடசாலைகளிலும் கல்வி அதிகாரிகளிடமும் வெளிப்படையாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை மையமாக வைத்துக் கொண்டு குறித்த ஆசிரியர்கள் பிரச்சினைக்குரியவர்கள், முரண்பாடுடையவர்கள் என்று கருதி அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

தேசிய ரீதியில் நடாத்தப்படும் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கமைய நுவரெலியா கல்வி வலயம் பின்தங்கியுள்ளமைக்கு அங்குள்ள பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளே காரணம் என அதிகாரிகளினால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்திலையில் தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர்களை சுதந்திரமாக தமது சேவையை செய்ய இடமளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட வகையில் உயர் அதிகாரிகள் அவர்களை மன உளச்சலுக்கு உட்படுத்தி வருகின்றமை நிறுத்தப்பட வேண்டுமென்றும் கோரப்படுகிறது.

நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சி ஏற்படுத்த வேண்டுமாயின் சகல தரப்பினரும் பொதுவான நோக்கின் அடிப்படையில் செயற்பட வேண்டும் அதனை விடுத்து தத்தமது அதிகாரத்தை வைத்துக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் பலி வாங்கும் செயற்பாடுகளில் எடுபடுவதன் மூலம் ஒட்டு மொத்த நுவரெலியா கல்வி வலய மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் இடமாற்றம் நடைபெற வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

சுஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here