ஜக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்கரசிங்க அவர்களுக்கும் ஒரு தொழிற்சங்கங்கள் சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க கல்வி அமைச்சா் இராதகிருஸ்ணன் குற்றச்சாற்று.
ஜக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவர் ரணில்விக்கரமசிங்க அவர்களுக்கும் ஒரு சில தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சியலும் இனைந்து சேறுபூசும் நடவடிக்கையில் முயற்சி செய்து வருவதாக மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வேலுசாமி இராதகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
05.02.2018.திங்கள் கிழமை அட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த போதே அவா் இவ்வாறுகுறிப்பிட்டார் இந்த ஊடகவியலாளா சந்திப்பில் அமைச்சர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினா் எஸ்.ஸ்ரீரதன் ஆகியார் கலந்து கொண்டனர் .
மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதியை ஆலோசியஸ் ஆர்ஜின் களவாடியுள்ளதாகவும் அதன் காரணமாகத்தான் 04.02.2018. அன்று அவர் கைது செய்யபட்டதாக ஒருசில தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர்
ஆகவே இதில் உண்மையும் இல்லையெனவும் ஜக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியையும் வெற்றியையும் தாங்கமுடியாத சிலரால் எற்படுத்துகின்ற ஒரு விசதனமான பிரச்சாரமென்பதனையும் மக்களுடைய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியில் பிரச்சினைகள் இருந்தால் மலையக மக்கள் முண்ணனியின் தொழிற்சங்கத்தையும் தொழிலாளர் தேசியசங்கத்தின் தொழிற்சங்த்தை நாடுமாறும் கேட்டு கொண்டார் .
இந்த நாட்டில் உள்ள ஜனாதிபதியும் பிரதமர் யாராக இருந்தாலும் மக்களுடைய ஊழியர் சேமலாப நிதியில் யாரும் கை வைக்கமுடியாது யெனவும் இது ஒரு பொய்யான பிரச்சாரமென்று இராஜாங்க கல்வி அமைச்சர் இராதகிருஸ்னண் மேலும் தெரிவித்தார் .
இது போன்ற பிரச்சாரங்கள் மக்களை மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள் ஆகவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டுமெனவும் கேட்டு கொண்டார்.
இம் முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி சபை தோதலில் நுவரெலியா மாவட்டத்தில் 12சபைகளையும் ஜக்கிய தேசிய கட்சி கைபற்றுமெனவும் தெரிவித்தார்.
இராஜாங்க கல்வி அமைச்சா் இராதகிருஸ்ணன் உரையாற்றும் போது………
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்