நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைகள் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது!

0
199

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைகள் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை , தெரிந்தனுப்ப வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை , கிராம அலுவலர்கள் பிரிவுகள் , உள்ளூர் அதிகார சபை பிரிவுகள் , பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2018.02.15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டடுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபை
================================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 10
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 06
உள்ளூர் அதிகாரசபை பிரிவுகள் : மவுஷாகலை ,பிரவுன்லோ
,சீத்தகங்குல,மறே , பிரவுன்வீக், மஸ்கெலியா , மாகாநெளு, அப்கொட் தேவகந்த, தம்பேதென்ன
நோர்வூட் பிரதேச சபை
=======================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 12
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 08
உள்ளூர் அதிகாரசபை பிரிவுகள் :
சமரவெளி , வனராஜா , சலங்கந்த , நவவெலிகம , நோர்வூட் , தென்மதுரை , லெட்சுமி கீழ்ப்பிரிவு , புளியாவத்தை , லெட்சுமி மேற்பிரிவு , பொகவான , லொயினோன் , பொகவந்தலாவை
அம்பகமுவ பிரதேச சபை
==========================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 13
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 08
செல்லிப்பிகம,ரம்பதெனிய ,கலுகல ,பொல்பிட்டிய ,ஜம்புதென்ன , கெஹேல்வராவ,லக்ஷபாண, விதுலிபுர,கினிகத்தென,வட்டவளை,ரொசல்ல,செனன்,ருவன்புர பகுதிகளிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள்
அக்கரப்பத்தனை பிரதேச சபை
======================================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 09
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 06
உள்ளூர் அதிகாரசபை பிரிவுகள் ;
ரஹன்வத்த ,நாகசேன ,ஹோல்புருக் , ஹென்போல்ட் ,தங்ககெல ,டயகம, வௌர்லி, அக்கரப்பத்தனை,எல்பெத்த பகுதிகளிலுள்ள கிராம சேவர்கள் பிரிவுகள்
கொட்டகலை பிரதேச சபை
============================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 10
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 06
உள்ளூர் அதிகாரசபை பிரிவுகள்;
க்ரேட்வெஸ்டன் , வட்டகொடை ,ரத்னகிரிய , கும்வுட் , டெவோன் , திம்புள்ள , போஹாவத்தை , கொட்டகலை ,குடஓயா , யுலிபீல்ட் ஆகிய பிரதேசங்களிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள்
நுவரெலியா பிரதேச சபை
=============================
உறுப்பினர்களின் எண்ணிக்கை : 14
தெரிந்தனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை : 09
உள்ளூர் அதிகாரசபை பிரிவுகள் ;
கந்தபொல , பார்க் , கல்பாலம , பீட்ருட் , சாந்திபுர , நானுஓயா , மாகொட , ருவன்எலிய , சீதாஎலிய , மீபிலிமானா, பெரக்கும்புர , கிரிமெட்டிய , வொல்ரீம் , அம்பேவல போன்ற பகுதிகளிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள்.

23467269_1625156890838915_5844345139359624485_o

நன்றி சோ. ஸ்ரீதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here